நான் ஒரு போதும் ரணிலுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததில்லை!

நான் ஒரு போதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு இல்லம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகும்.
நான் ஒரு போதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததில்லை.
எல்லா சந்தர்ப்பத்திலும் நான் அவருடன் இருந்தேன்.
ஐக்கிய தேசியக் கட்சி உடைந்த போதும் நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தேன் என்பது அவருக்கு தெரியும் என மனோ கணேசன் தெரிவித்தார்.
![]()