முச்சந்தி

முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு

முல்லைத்தீவு – குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை  துரத்தியுள்ளது.

பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் வராமையினால் பாடசாலை நிர்வாகத்தினரால் வலயகல்வி பணிமனைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வலயகல்வி பணிமனையினர் பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும் பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

ஊர்மக்கள் இணைந்து யானையை விரட்ட முடியாதமையினால் வன ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு தகவல் வழங்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டிவிட்டுள்ளனர்.

குறித்த யானை கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *