முச்சந்தி

சிட்னி முருகன் கோவில் கலாச்சார கல்வி மண்டபம் மீள் திறப்பு…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

சிட்னி முருகன் கோவிலின் கலாச்சார கல்வி மண்டபம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 07ம் திகதி 2025 ஞாயிற்றுக்கிழமை சைவத் தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய, நியூ சவுத் வேல்ஸ் பாராளமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி வாழ் தமிழ் மக்களுக்கு ஓர் மைல்கல் நிகழ்வாக முருகன் கோவிலின் கலாச்சார கல்வி மண்டபம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார கல்வி மண்டபம் மீள் நிர்மாணம் செய்யப்படுவதற்கு , நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிதியுதவி அளித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பாராளமன்ற உறுப்பினர்
ஜூலியா ஃபின் எம்.பி, அவுஸ்திரேலிய பாராளமன்ற உறுப்பினர்
ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி, மற்றும் ப்ராஸ்பெக்ட் மாநில உறுப்பினர் ஹக் மெக்டெர்மாட் எம்.பி ஆகியோரின் உறுதியான ஆதரவிற்கு சிட்னி முருகன் கோவிலின் கலாச்சார கல்வி மண்டபம் நிர்வாகிகள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *