இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்

வடக்கு கிழக்கு தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்கள் 3111 வது நாளான இன்று குறித்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திர்ந்தனர்.

வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து ஆரம்பமான இந்த ஊர்வலம் மணி கூட்டுச் சந்தி வழியாக ஏ9 வீதியை அடைந்து அவர்களுடைய போராட்ட பந்தலை வந்தடைந்திருந்தனர்.

அங்கு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் தமது போராட்டத்தினை நிறைவு செய்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *