இலங்கை

ரணிலுக்கு பெரும் உயிராபத்துள்ளது!; பிணை கோரிய சட்டத்தரணி

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய உடல்நிலைமைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளிப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன,

ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தில் நோய் நிலை உள்ளதாகவும் இதயத்திற்கான 4 குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு குழாயில் 100 வீத அடைப்புள்ளது.

இது இதயத்திற்கு அண்மித்துக் காணப்படுவதால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்றும் மருத்துவ ஆலோசனைக்கமைய சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.

இதனைத் தவிர சிறுநீரக நோய், நீரிழிவு, உடலில் சோடியம் குறைபாடு, அதிக குருதியழுத்தம், நுரையீரல் நோய் ஆகியவற்றாலும் ரணில் விக்கரமசிங்க பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரதூரமான உயிராபத்து உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நிலைமை வழமைக்கு மாறான அப்பாற்பட்டுள்ளதாகவும் அவருக்கு அனைத்து நோய்களும் உள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *