இலங்கை

மன்னாரில் இன்று 24 வது நாளாகவும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இன்றையதினம் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்று வந்த நிலையில் போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்கு மாவட்ட செயலகத்திற்கு அமைதியான முறையில் நுழைந்த நிலையில் பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர்.

இந்த நிலையில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடு இடம்பெற்றது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டக்காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்தார்.
இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை சக்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *