பலதும் பத்தும்

தாயகம் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (17) நாடு திரும்பியுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 15ஆம் திகதி விண்வெளியிலிருந்து பூமி திரும்பியிருந்த சுக்லா, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இந்தியா வந்த அவருக்குடெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறப்பான வரவேற்பளித்தனர்.

விண்வெளித் துறையில் சாதனை:

இந்தியாவிலிருந்து கடந்த 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மா எனும் விமானப்படை வீரர்தான் விண்வெளிக்கு சென்றார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் 40 ஆண்டுகளாக விண்வெளிக்கு போகவில்லை. இந்நிலையில்தான் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்கு சென்றிருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி அவர் விண்வெளிக்கு சென்றார். ஆக்சியம் ஸ்பேஸ் எனும் அமெரிக்க தனியார் நிறுவனம்தான் அவரை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை அகியவற்றை சேர்ந்த 3 வீரர்கள் சுபான்ஷு உடன் பறந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம்தான் இவர்களை பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டு சேர்த்தது. மொத்தம் 28 மணி நேரம் பயணித்த இந்த விண்கலம் ஜூலை 26ஆம் திகதி தான் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. 18 நாட்கள் இந்த மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை சுபான்ஷு மேற்கொண்டிருந்தார். ஜூலை 14ஆம் திகதி சுபான்ஷு உட்பட 4 வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர். பொதுவாக விண்வெளிக்கு சென்று வந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். ஏனெனில் விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. எனவே கண்கள், எலும்புகள் உள்ளிட்டவை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும். இதை சரி செய்ய இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சபான்ஷு தற்போது இந்தியா திரும்பியிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button