இலங்கை

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 10 ஆவது நாளாக தொடர் போராட்டம்; நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் மாவட்ட மக்கள்,பொது அமைப்புக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆரம்பித்துள்ள போராட்டம் 10 வது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் நேற்று சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கினர்.

திங்கட்கிழமை நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய உபகரணங்களை மன்னார் தீவுக்குள் பொலிஸாரின் பாதுகாப்புடன் எடுத்துவர முற்பட்ட நிலையில் போராட்டக் காரர்களின் பலத்த எதிர்ப்பினால் காற்றாலை உபகரணங்களுடன் வருகை தந்த பார ஊர்தியினால் உள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

அதே நேரம் பொலிஸார் குறித்த போராட்டக்காரர்களை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்து போராட்டக்காரர்களை வெளியேற்ற முயன்றபோதும் தொடர்சியான போராட்டம் காரணமாக மன்னார் நீதி மன்ற வளகத்திற்கு முன்பாக குறித்த வாகனம் நிறுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *