இலங்கை

செம்மணியில் இன்றும் நாளையும் நிலத்தை ஊடுருவி ஸ்கான் சோதனை!

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நிலத்தை ஊடுருவி நிலத்துக்கு கீழே இருக்கின்ற விடயப் பரப்புகளை ஆராய கூடிய ஸ்கான் பரிசோதனை இன்றும் நாளையும்(திங்கள்,செவ்வாய்) மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

கொழும்பு ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழத்தின் ஒத்துழைப்புடன் சித்துப்பாத்தி மயானத்தை ஸ்கான் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின் 29 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த மனிதப் புதைகுழியின் நீள அகலங்கள் அல்லது இது மேலதிகமாக அகழ்வாராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அதனுடைய விபரிப்புகளை பார்க்கக் கூடியதாக இருக்கும். ஆகவே அது எடுத்து தருகின்ற படங்களினை பொருள் கோடல் செய்து அதற்கேற்ற மாதிரியான தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button