பலதும் பத்தும்

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண்  (28) முதன்முறையாக 19,500 புள்ளிகளைத் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது.

அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 50.15 புள்ளிகள் உயர்ந்து 19,517.86 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

ரோயல் செரமிக் லங்கா, மெல்ஸ்டாகார்ப், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், LB ஃபைனான்ஸ் மற்றும் CT ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட 97 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்ததே அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண்ணின் அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், S&P SL 20 விலைச் சுட்டெண் 19.47 புள்ளிகள் உயர்ந்து 5,774.51 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 6.16 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button