பலதும் பத்தும்

கதிர்காமம் காட்டுப் பாதை ஊடாக 10 நாட்களில் 40,379 பேர் பாதயாத்திரை

அம்பாறை மாவட்டத்தின் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து குமண தேசிய பூங்கா கதிர்காமம் காட்டுப் பாதை ஊடாக இம்முறை 40,379 பேர் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.

கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனையிட்டு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலாபாகங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்தனர். .

கதிர்காமம் காட்டுப் பாதை ஜூன் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இப்பாதையானது 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்று மணியுடன் மூடப்பட்டுள்ளது.

இம்முறை சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் காட்டுப்பாதையில் பாதயாத்திரையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜுன் 20 ஆம் திகதி தொடக்கம் 29ஆம திகதி வரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சென்றுள்ளார்.

இம்முறை கண்டிப்பாக காட்டுப்பாதையூடாக பயணிப்பவர்கள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது . தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு குடி நீர் சேவை வழங்கிவருகின்ற போதிலும் அவை போதுமானதாக இல்லை என பக்தர்கள் கவலை தெரிவித்தனர் . கதிர்காமம் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறும் நீர் வெட்டுடன் நிறைவுபெறவுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button