முச்சந்தி

இரண்டு வருடங்களாக சிறுமி துஷ்பிரயோகம்; தாயின் காதலன் கைது; புத்தளத்தில் சம்பவம்!

இரண்டு வருடங்களாக 9 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் குறித்த சந்தேகநபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் விசாரணையில் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதான ரயில் ஓட்டுநர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் முதலில் தன்னை துஷ்பிரயோகம் செய்த திகதிகள் குறித்து தனக்கு தெளிவான நினைவில் இல்லை எனவும் 2023 ஆம் ஆண்டு முதல் தன்னை துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிறுமியின் தாயின் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதலன் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button