பலதும் பத்தும்

மிகப்பெரிய பாஸ்வோர்ட் கசிவு; 16 பில்லியன் கணக்குகள் அம்பலம்..!

வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

விசாரணையில் தகவல் கசிவுகள் அனைத்தும், 30 தனித்தனி தரவுத்தொகுப்புகளில் இருந்து ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு தொகுப்பிலும் பத்து மில்லியன் முதல் 3.5 பில்லியன் பதிவுகள் வரை உள்ளன.

இதில் Facebook, Google, Telegram, GitHub, மற்றும் பல அரசு தளங்களின் உள்நுழைவு விவரங்கள் அடங்கியுள்ளன.

“இது வெறும் தனிப்பட்ட மீறல் அல்ல, மாறாக ஒரு வெகுஜன கணக்கு சுரண்டலுக்கான முழுமையான வரைபடம்,” என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தகவல் கசிவுகள், கணக்குகளை கைப்பற்ற, ஃபிஷிங் தாக்குதல்கள் நடத்த மற்றும் சைபர் கிரைமில் பயன்படுத்த சாத்தியம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துறைசார் நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் பயனர்கள் முன்னர் பயன்படுத்திய கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறும், பாஸ்வேட் மேனேஜரை பயன்படுத்தி வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குமாறும், அனைத்து முக்கிய கணக்குகளிலும் மல்டி-ஃபேக்டர் அங்கீகாரம் (MFA)-ஐ இயக்குமாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டார்க் வெப்பில் உங்கள் சான்றுகள் வெளியானதா என்பதை கண்காணிக்க அலெர்ட்களை பயன்படுத்தவும். சாத்தியமான தளங்களில் பாஸ்கீ போன்ற கடவுச்சொல் இல்லா பாதுகாப்பு முறைகளுக்கு மாறுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button