ஊழல் பாதையில் செல்லும் அரசு; திலித் ஜயவீர எம்.பி.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னெப்போதும் இல்லாதவாறான ஊழல் மிக்க பாதையிலேயே இந்த நாட்டை கொண்டு கொண்டு செல்கின்றது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஐஐ ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான 2025.05.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை மற்றும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான 2025.06.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் இரண்டாவது அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் தேர்தல் காலத்தில் எவரையும் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியவர்கள் இப்போது இரகசிய வாக்கெடுப்பு என்ற குண்டை பயன்படுத்துகின்றனர். நாங்கள் டீல் அரசியல் செய்வதில்லை என்று கூறியவர்கள் இப்போது எமது அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாது இரகசிய வாக்கெடுப்புகளை நடத்துகின்றனர். நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து முன்மாதரியான செய்தியை வெளிப்படுத்தவே முயற்சித்தோம். ஆனால் மிகவும் கீழ் தரமான முறையில் அரசியல் ஊழலை முன்னெடுத்து எமது கட்சியினரை அழைக்கின்றனர். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த நாட்டை முன்னெப்போதும் இல்லாதவாறான ஊழல் பாதையிலேயே கொண்டு செல்கின்றது. இதனை கவலையுடன் இதனை கூறுகின்றேன். இந்த நாட்டு மக்கள் தொடர்பில் கவலையுடன் இதனை வெளிப்படுத்துகின்றேன் என்றார்.
![]()