பலதும் பத்தும்

25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு

25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு அறிமுகப்படுத்தியது ஐக்கிய அமீரகம்!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த “RED PLANET” என்ற நிறுவனம், 25 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

“FREEZE DRYING” என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உணவின் சுவை, ஊட்டச்சத்து ஆகியவை தக்க வைக்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைக்காமலேயே உணவைச் சாப்பிடலாம் என RED PLANET நிறுவனத்தின் CEO அல் நொராய்ஸ் ஷா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சமைத்த உணவு வகைகளையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்பது என்பது மருத்துவ ரீதியிலான பாதிப்பு எனத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் 25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத அளவுக்கு உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இந்தத் தொழில்நுட்பம் உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button