முச்சந்தி

வெளிநாடுகளில் பல ஆண்டு வாழ்க்கையில் வட, கிழக்கு இளைஞர், யுவதிகள் பிரிந்து வாழ்வது மிக அதிகம்

திருமணம் முடித்த இளைஞர், யுவதிகள் ஒருவரை ஒருவர் பிரிந்து வெளிநாடுகளில் பல ஆண்டுகள் வாழ்வதை நாம் காண்கின்றோம். வடகிழக்கைப் பொறுத்தவரை இந்த நிலைமை மிக அதிகமாக காணப்படுகின்றது. வெளிநாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிப்பது போல் இலங்கையில் மேற்கொள்ளப்படும் தீர்ப்புகளை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளச் செய்யும் வழிவகைகளை உருவாக்கிக் கொள்வது அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

திருமணம் முடித்த இளைஞர், யுவதிகள் ஒருவரை ஒருவர் பிரிந்து வெளிநாடுகளில் பல ஆண்டுகள் வாழ்வதை நாம் காண்கின்றோம். வடகிழக்கைப் பொறுத்தவரை இந்த நிலைமை மிக அதிகமாக காணப்படுகின்றது.அது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அதேபோன்று வெளிநாட்டில் வாழும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதென்றால் அதற்கான சுதந்திரமான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சட்டங்கள் மக்கள் நம்பிக்கையை வென்றதாக அமைவதே நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும்.நாட்டின் ஜனநாயக உரிமைகள் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதுவே நாட்டு மக்கள் அனுபவிக்க கூடிய ஜனநாயக உரிமை. அதற்கான வழிவகைகளை நாம் முன்னெடுப்போம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button