முச்சந்தி

வவுனியா சிங்கள பிரதேச சபையின் தவிசாளராக குணபால சரத்மது தெரிவு..!

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சுதர்சன சாமர வீரக்கோன் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் குணபால சரத்மது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், பிரதேசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவிற்கு இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி சார்பில் சுதர்சன சாமர வீரக்கோன், மற்றும் சுயேட்சைகுழு சார்பில் கசுன் சுமதிபால ஆகியவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது.

இதன்போது குறித்த தெரிவினை ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடாத்துமாறு 10பேரும் பகிரங்கமாக நடாத்துமாறு 7பேரும் வாக்களித்தனர்.

பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுகள் இரகசிய வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.

வாக்களிப்பு முடிவுகளின் படி தேசியமக்கள் சக்தியின் உறுப்பினருக்கு 12வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

சுயேட்சை உறுப்பினருக்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் சுதர்சன சாமர வீரக்கோன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.

உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குணபால சரத்மதுவின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

வேறு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாமையினால் போட்டியின்றி அவர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button