பலதும் பத்தும்

மாலைத்தீவின் சுற்றுலாத் துறை தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!

பொலிவூட்  சினிமாவின் முன்னணி நடிகையான  கத்ரீனா கைப் சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

 

மாலத்தீவுகளின் தேசிய சுற்றுலா வாரியம் நேற்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது சமூக ஊடகப் பக்கம் வெளியிட்டது.

அதில் ‘எங்கள் உலகளாவிய  தூதராக கத்ரீனா கைப் இருப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தரும் தருணம், என அந்த நிறுவாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகளாவிய தூதராக கத்ரினா கைப் நியமிக்கப்பட்டமை  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில்  ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button