IPhoneகளில் நிறுத்தப்பட்ட யூடியூப் வலைத்தளம்

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடம் பிரபலமான வீடியோ செயலியான கூகிளுக்கு சொந்தமான யூடியூப் சில பழைய ஐபோன் மொடல் கையடக்கதொலைபேசிகளில் தனது சேவையை நிறுத்தியுள்ளது.
அந்தவகையில் iPhone 6s, iPhone 6s பிளஸ், iPhone 7, iPhone 7 பிளஸ் மற்றும் முதலாம் தலைமுறை iPhone SE. ஆகிய கையடக்கதொலைபேசிகளில் யூடியூப் சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

யூடியூப் செயற்படாது
மாற்றாக, உங்களிடம் ஐபாட் டச் 7 இருந்தால் அதிலும் யூடியூப் செயற்படாது. இந்த அறிவிப்பு குறித்து நபரொருவர் ‘எனது iPhone 6s மெதுவாக வலுவிழக்கப் போகிறது’ என தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 அன்று வெளியிடப்பட்ட பதிப்பு 20.22.1 இல் யூடியூப் அமைதியாக மாற்றத்தைச் செய்தது. ஆப் ஸ்டோரில், யூடியூப் இந்தப் பதிப்பை ‘பிழை திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் அதிகமான பூனை வீடியோக்கள்’ கொண்டதாக விவரிக்கிறது.
இருப்பினும், தற்போது ஐபோனில் இயங்க iOS 16.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை எனவும், ஐபாடில் இயங்க iPad 16.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை எனவும் சிறிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()