இலங்கை

அமெரிக்காவின் அழுத்தத்தால் இஸ்ரேலுக்கு இலங்கை துணைபோகக் கூடாது;  இந்தியாவுடனான உறவுக்குச் சிக்கல் வரும்

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து இஸ்ரேலின் சியோனிச அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்கு சாதமான நிலைப்பாட்டை இலங்கை எடுக்குமாக இருந்தால் அது எமது நீண்டகால அணிசேரா கொள்கை மற்றும் சுயாதீன வெளிநாட்டு கொள்கைக்கும் முரணாக அமையும். அத்துடன் இத்தகைய நிலைப்பாடு அண்டைய நாடான இந்தியாவுடனான பிராந்திய தொடர்புகளுக்கும் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நிசாம் காரியப்பர் எம்.பி இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்ட முன்மொழிவானது மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதியாகின்ற அமெரிக்காவின் டொனல்ட் டிரம்பின் ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கைகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவது மட்டுமன்றி மத்திய கிழக்கில் நீண்ட காலமாக இலங்கைக்கு உதவி வந்த ஈரான் போன்ற நட்பு நாடுகளின் நலன்களை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம் என்பதனை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து இஸ்ரேலின் சியோனிச அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்கு சாதமான நிலைப்பாட்டை இலங்கை எடுக்குமாக இருந்தால் அது எமது நீண்டகால அணிசேரா கொள்கை மற்றும் சுயாதீன வெளிநாட்டு கொள்கைக்கும் முரணாக அமையும். அத்துடன் இத்தகைய நிலைப்பாடு அண்டைய நாடான இந்தியாவுடனான பிராந்திய தொடர்புகளுக்கும் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இலங்கையின் பொருளாதார வர்த்தகத்தையும் பாதிக்கும். பல துறைகளில் இதன் தாக்கம் ஏற்படுத்தலாம்.

இந்த பாவச் செயலுக்கு நாமும் பங்காளிகள் ஆகின்றோம். ஒரு வல்லரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை துணை போவது சர்வதேச சட்டங்களுக்கும் முரணான இராணுவ நடவடிக்கைக்கு இலங்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் என்பதுடன், சர்வதேச சட்ட பொறுப்பு கூறலுக்கும் கேள்விகளுக்கு நாங்கள் உள்ளாகலாம். எனவே இலங்கை எந்தவொரு வல்லரசுக்கும் அடிபணியாமல் வெளிநாட்டு கொள்கை, சர்வதேச சட்ட கோட்பாடுகளுக்குள் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *