கட்டுரைகள்

குறள்கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 06… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இந்த தலைப்புக்கு இப்போது நான் எடுத்துக் கொள்ளும் திருக்குறள்,

“கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

என்ற குறளாகும். இந்த குறளைப் பற்றி சொல்லும்முன் கொஞ்சம் பீடிகை தேவைப்படுகிறது. அதலால் குறளுக்குள் செல்லும் முன் ஒரு முன்னோட்டம்.

ஒரு பொருளின் பொருளை எங்கு சொன்னாலும் எப்போது சொன்னாலும் எவர் சொன்னாலும் அப்பொருளை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் அப்பொருளின் கருத்தை அவரவர் அறிவுக்கு தக்கபடி சொல்ல ஆரம்பித்து விடுவர். அப்படி அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்கும்படியும் இருக்கும்.

தமிழரில் பெரும்பாலானோர் வாசிப்பு அனுபவம் உடையவர்களாகவே இருக்கின்றனர். இதற்காகவே வாசகர் வட்டம் என்று வாசித்ததை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாசிப்பு என்பதை நவீனங்கள் மட்டும் வாசிப்பது என்று வலிந்து சென்று பொருள் கொள்ளத் தேவையில்லை. வாசிப்பவை கட்டுரைத் தொகுப்பாகவோ கவிதைத் தொகுப்பாகவோ இருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் ஆய்வுக்கட்டுரைகளாகவும் இருக்கலாம். வாசிப்பது என்பது பல வடிவங்களில் எவ்வளவோ இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையில் வாசிப்பு என்பது இருக்கும். வாசிப்பு என்பதற்கு இதுதான் என்று எவரும் இலக்கணம் வகுத்திருப்பதாக நான் அறிந்தமட்டில் இல்லை.

நான் இங்கு சொல்ல வருவது யாதெனில் வாசித்து அறிந்ததைத்தான் தங்களிடம் பகிர்கிறேன். எதுவும் என் சொந்தக் கருத்து இல்லை. ஒருவரது சொந்தக்கருத்தை ஒருவரிடம் திணிக்க இயலாது. கருத்தை திணிப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆதலால் நாம் சொல்லவருவதில் ஆதாரம் இல்லையெனில் நாம் ஓரங்கட்டப் படுவோம்.

Welcome To TamilAuthors.comபழங்கால இலக்கியங்கள் யாவும் பனை ஓலைகளில் எழுதப்பட்டவை. பனை ஓலைகளின் ஆயுட்காலம் இருநூற்று ஐம்பது முதல் முந்நூறு ஆண்டுகள்தாம். அதாவது அவ்வோலைகள் அத்தனை ஆண்டுகள்வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதன்பின் அவை பழுதடைந்து உடைந்து நொருங்க ஆரம்பித்துவிடும். அப்படி நொருங்கி அழிந்து போனால் அத்தோடு அந்த இலக்கியங்களும்
அழிந்து போகும்.

அவ்வாறு அந்த இலக்கியங்களை அழிந்து போகாமல் காக்க அவற்றை அழிவதற்கு முன்பாகவே படி எடுத்துவிடுவார்கள். இப்படி படியெடுப்பது என்னவெனில் வேறொன்றும் இல்லை அதை பிரதி எடுப்பதுதான். இப்படி தமிழைத் தாய்மொழியாக கொண்ட ஒரு பிரிவினர் பார்த்துப் பார்த்து எழுதி படி எடுத்தனர்.

தமிழரில் இப்பிரிவுக்கும் மற்ற தமிழ்ப் பிரிவினருக்கும் இங்கு வந்த இன்னொரு இனம் வெறுப்பை விதைத்துள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் தமிழரில் தீண்டாமையோ படி நிலைகள் இருந்ததாக பண்டைய இலக்கியங்கள் கூறவில்லை.

இவ்வாறு இலக்கியங்களை படி எடுப்பவர்கள் கோவிலில் வழிபாடு, சோதிடம் சொல்வது,தமிழ் இலக்கியம் ஆசிரியார்கள் என்று பல தொழில்களை செய்திருக்கிறார்கள். இங்கு குடியேறிய வேற்றினத்தவர்களில் சிலர் இவர்கள் செய்த தொழில்களேயே தாமும்செய்து இவர்களைப் போன்றே மாறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தாய்மொழி வேறு. இதையும் வரலாற்றாசிரியர்கள் பதிவிட்டுள்ளனர்.

இந்த மாற்றங்கள் யாவும் முதலாம் குலோத்துங்க சோழன் கலத்தில் ஓரளவும்
நாயக்கமன்னர்கள் காலத்தில் அதிக அளவில் நடந்ததாக வரலாறு சொல்கிறது.
இந்த பின்னனணியை வைத்துத்தான் இலக்கியச் சிதைவுகளை ஆராய வேண்டும்.
தமிழிலக்கியங்களை தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் கண்டிப்பாக சிதைக்க முன் வரமாட்டார்கள்.

வேற்று மொழியினரும் தமிழ்மீது பற்றற்றவர்களுமே இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். இலக்கியச் சிதைப்பைத்தான் இடைச்செருகல் என்கின்றனர். இவ்வாறு தமிழிலக்கியங்களில் இடைச்செருகல் இலைமறைக் காயாகவும் வெளிப்படையாகவும் நடந்தேறியிருப்பதை தமிழறிஞர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிப்படையாகத் தெரியும் இடைச்செருகல் தக்க சான்றுகள் மூலம் தெளிவுபடுத்தி மக்களை உணரவைக்க முடியும். அவர்களும் உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இடைச்செருகலை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது. அப்படி நீக்கவேண்டுமெனில் சட்டத்தின் துணைகொண்டு பல அறிஞர் பெருமக்களின் முயற்சியினால் மட்டுமே முடியும்.

அதற்கும் சில சான்றுகளைப் பார்ப்போம். தமிழின வரலாற்றையே சிதைத்து மாற்றியுள்ளார்கள். தமிழர் வீரம், தமிழர் கட்டிடக்கலை, தமிழர் நாகரீகம் மற்றும் தமிழர் வரலாறு எல்லாவற்றையும் மறைத்து உண்மையென ஏற்கும்படி கட்டமைக்கப் பட்டு நம்ப வைக்கப் பட்டுள்ளது. ஒன்றை நெடுங்காலம் நம்பிய பிறகு உண்மையைச் சொன்னாலும் அது தவறுபோலவே தோன்றும்.

இப்போது நடைமுறையில் இருப்பதையே சான்றாக கூறுகிறேன். கருணைக் கிழங்கு மற்றும் சேனைக்கிழங்கு இரண்டிற்கும் வேறுபாடுள்ளதை நாம் அறிவோம். ஒன்று பூசணிக்காய் மாதிரி பெரிதாக இருக்கும் மற்றொன்று உருளைக்கிழங்கு போல் சிறிய அளவில் இருக்கும். தமிழ்நாட்டிலேயே ஒருபகுதியில் சேனைக்கிழங்கு என்பதை மறுபகுதி மக்கள் கருணைக் கிழங்கென்பர்.

பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்..! யாழில் போராட்டத்தில் குதித்த  வேலையில்லாப் பட்டதாரிகள் | SamugamMedia

அதைப்போலவே தென்னை ஓலை. தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் பாடைகட்ட பயன்படுத்துவர். மற்றொரு பகுதியில் அதே ஓலையை திருமணப் பந்தலில் பயன்படுத்துவர். இதே போன்று வழக்கத்தில் வந்த ஒன்றை மாற்றுவது கடினம். இதைப் போலத்தான் இடைச்செருகலும். இருப்பினும் மெய்ப்பொருளைக் காண்பதில் தவறில்லையே.

இதுபோன்ற வரலாற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் பல நூறு ஆண்டுகளாக
நடந்தேறியுள்ளன. அத்தகைய வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு நினைத்தால் மாற்றிவிடமுடியும்.

இலைமறைக் காயாக பச்சோந்திபோல் சில இடைச்செருகல்கள் உள்ளன. இவற்றை சொன்னாலும் எளிதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்களின் ஏதோ ஒரு உள் நோக்கம் தடுக்கும். ஒருவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தும் என்ன பயன்? மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒன்றினால் கட்டுண்டு இருப்பாரெனில் அவர்களை கணக்கில் கொள்ளக்கூடாது.

எல்லா இலக்கியங்களிலும் இடைச்செருகலை எளிதாக செய்துவிட முடியாது. இடைச்செருகல் செய்து இலக்கியத்தின் தன்மையை மாற்ற முடியாதபோது சூழ்ச்சிகளாலும் நூல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த சூழ்ச்சியை உணராது தமிழர் பல இலக்கியங்களை இழந்துள்ளார்கள்.

(அடுத்ததில் முடியும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button