செய்திகள்

அப்பா அம்மா, மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ,ஜனநாயகன்’ பார்த்த விஜய்!

முதலமைச்சர்  விஜய், அப்பா அம்மா,மற்றும் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தை தாகூர் திரைப்பட நகரத்தில் உள்ள  இயல் இசை கல்லூரி அரங்கில் நேற்று பார்த்து ரசித்துள்ளார்.
படம் பார்த்து முடிந்து நள்ளிரவில் அவர் தனது இல்லத்திற்குத் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளிலும் சிறப்பு காட்சிகளிலும் படத்தை முன்கூட்டியே பார்த்த ரசிகர்கள், தங்களது நேர்மறையான விமர்சனங்களை சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
தியேட்டர்களில் திருவிழா கோலமாக கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தனது பெற்றோருடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்த இந்த செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும் ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button