பலதும் பத்தும்

சர்வதேச சமையல் போட்டியில் பதக்கங்களை அள்ளிய இலங்கை பெண்கள்

26வது “எக்ஸ்போ குளினெய்ர்” “Expo Culinaire” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று  அதிகாலையில் வந்தடைந்தனர்.

இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே 21 முதல் 23 ஆம் திகதி  வரை நடைபெற்றது.

இதில், உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் வசிக்கு இவர் அந்தப் பகுதியில் சமையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதேபோல், நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதேபோல், இந்தப் போட்டியில் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அவர் கொழும்பில் வசிப்பவர், அதே பகுதியில் சமையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர்கள் மூவரும் முதல் முறையாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுற்றுள்ளனர்.

மூவரும்  ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர்,

மேலும் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவும் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *