பலதும் பத்தும்

NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button