பலதும் பத்தும்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் அமெரிக்க குடியுரிமை!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் குடியேறிகளுக்கான அமெரிக்க குடியுரிமை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு , குடியேறிகளுக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிக்கு அமெரிக்க குடியுரிமை

அந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் குடியேறிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது நிகழ்ச்சி நடத்துவது குறித்து அனுமதி கேட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் நிகழ்ச்சிக்காக அதிகாரிகள் அனுமதி வழங்கினால்தான் நிகழ்ச்சி நடைபெறும் எனவும்அனுமதி கிடைத்தாலும் போட்டியாளர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் அதன் பின்னரே போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துவது மகிழ்ச்சியான ஒன்று எனவும் அது சரியாக இருக்க வேண்டும் எனவும் அமெரிக்க பொதுத்துறைப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போட்டியாளர்களில் யார் அமெரிக்கா மீது அதிக பற்று கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கூறியுள்ள அதிகாரிகள், நிகழ்ச்சி தினமும் ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button