பலதும் பத்தும்

2035 ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?

பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று நகை தான். தங்கத்திற்கு மதிப்பு முந்தைய காலம் முதலே அதிகமாக உள்ளதால்தான் வரதட்சணையாக தங்க நகை கொடுக்கப்பட்டு வந்தது.

மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் தங்கம் ஒரு பெரிய பொக்கிஷமாக மாறி வருகிறது. இதன் மதிப்பு குறைந்ததே இல்லை.

விலை அதிகரிப்பதற்குள் எப்படியாவது தங்கம் வாங்கிவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்.

அதையும் மீறி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நகை வாங்கமுடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.

அன்றைய காலத்தில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பல சவரன் வாங்கிய வைத்திருந்தால் தற்போது அதிர்ஷ்டம் தான்.

அன்றைய காலத்து நகைகளை இன்றைக்கு விற்றால் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம்.

தங்கம் விலை இப்போது ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. பொருளாதாரம் மற்றும் சந்தை உலகில் ராபர்ட் கியோசாகி என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

”ரிச் டாட் பூர் டாட்” (Rich Dad Poor Dad) என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை குறித்து ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளார்.

சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், தற்போதைய பொருளாதார நிலைமை அமெரிக்காவை ஒரு பெரிய மந்தநிலையை நோக்கித் தள்ளுகிறது. ஆனால் இந்த நெருக்கடி ஒரு பெரிய வாய்ப்பாகவும் இருக்கலாம் என்று அவர் கூறினார்.

மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை $30,000ஐ (சுமார் ரூ.25 லட்சம்) தாண்டும் என்று ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.

அதேபோல், வெள்ளி மற்றும் பிட்காயின் வாங்குவதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button