இலங்கை

பிள்ளையான் தேசிய வீரர் அல்ல யுத்த வெற்றிக்கு உதவியவர்

பிள்ளையானை தேசிய வீரர் என்றோ அல்லது தேசப்பற்றாளர் என்றோ கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையானை தேசிய வீரர் அல்லது தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறியுள்ளார். இவ்வாறு கூறியதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் பிள்ளையான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி இலங்கை இராணுவத்திற்கு உதவியமை எமது யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்துள்ளார் என்பதனை மட்டுமே கூற முடியும்.

இதேவேளை பிள்ளையானின் பெயரை சனல் 4 நிகழ்ச்சியில் மௌலானா என்ற நபரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இணைத்து குறிப்பிட்டுள்ளார். ஆனால் இமாம் அறிக்கையில் பிள்ளையான் அதனுடன் தொடர்புபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *