யாழில் ஜனாதிபதியின் வருகையின் போது சோதனை நிலையங்கள் திடீரென மாயம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகை தந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியுமே இவ்வாறு திடீரென அகற்றப்பட்டது.
அத்தோடு, அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
இதற்காக ஏ9 வீதி மற்றும் பூநகரி வீதிகள் ஊடாக ஜனாதிபதி பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி வரும் போது மட்டும் இந்தச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன.
அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு முன்னரும் இந்தச் சோதனைச் சாவடிகள் தளர்த்தப்பட்டு சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டது.
![]()