Mum’s Busy Work – குழந்தைகள் புத்தகத்தை எழுதி வெளியிடும் ஜசிந்தா ஆர்டெர்ன்..!!

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் டேம் ஜசிந்தா ஆர்டெர்ன் ஒரு குழந்தைகள் புத்தகத்தை வெளியிட உள்ளார்.
அவர் பிரதமராக இருந்த கால கட்டத்தில் தனது மகள் நீவ் தன்னிடம் கூறிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று காலை அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அம்மாவின் பிஸி வொர்க் (Mum’s Busy Work) என்ற தலைப்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகம் Penguin Random House மூலம் வெளியிடப்படுகிறது, மேலும் இந்த புத்தகம் “வேலை செய்யும் தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை” விவரிக்கிறது.
இதனிடையே இந்த ஆண்டு ஜசிந்தா ஆர்டெர்ன் எழுதிய மற்றொரு புத்தகமும் வெளிவர காத்திருக்கின்றது.
A Different Kind of Power: A Memoir by Jacinda Ardern என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த புத்தகம் ஜூன் 3 ஆம் திகதி அன்று சர்வதேச வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இந்த புத்தகத்தை “புதிய தலைமுறை தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் முன்னாள் பிரதமரின் ஆழ்ந்த தனிப்பட்ட நினைவுக் குறிப்பு” என்று பென்குயின் பதிப்பகம் விவரிக்கிறது.
![]()