பலதும் பத்தும்

யுனிகோன் யானை சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்

மின்னேரியா தேசிய பூங்காவில் யுனிகோன் என்ற யானை உயிரிழந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குறித்த யானை உயிரிழந்துள்தாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் உடல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 15 ஆம் திகதி யுனிகோன் என்ற யானை ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து வனப் பாதுகாப்பு திணைக்களத்தினர் விரிவான விசாரணையை நடத்தியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெண்டி மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button