பலதும் பத்தும்

வெள்ளை முடியை வேரிலிருந்து கருப்பாக்க உதவும் எண்ணெய்; எப்படி தயாரிப்பது?

இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.

இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி
  • அவுரி இலை- 1 கைப்பிடி
  • மருதாணி- 1 கைப்பிடி
  • செம்பருத்தி பூ- 1 கைப்பிடி
  • நெல்லிக்காய்- 10
  • வெந்தயம்- 50g
  • கருஞ்சீரகம்- 50g

தயாரிக்கும் முறை

முதலில் கறிவேப்பிலை, அவுரி இலை, மருதாணி, செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவற்றை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த பொருட்களை சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அடுத்து அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.

இறுதியாக எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் இதனை நன்கு ஆறவைக்கவும்.

பின்னர் ஒரு பாட்டிலில் வடிகட்டி தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி கருப்பாக மாறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button