பலதும் பத்தும்

முன்ஜென்ம பந்தம்; தன்னை கொன்றவர்களை அடையாளம் காட்டிய சிரியா சிறுவன்

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற தழும்புடன் பிறந்த குழந்தையைப் பார்த்ததுமே, அவர்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள், இது நிச்சயம் முன் ஜென்மத்தில் அந்தக் குழந்தைக்கு நேரிட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்புதான் என்று கட்டாயம் கூறியிருந்தார்.

முன்ஜென்ம பந்தம்; தன்னை கொன்றவர்களை அடையாளம் காட்டிய சிரியா சிறுவன் | A 3 Year Old Boy Remembered Being Murdered

கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் இருக்கும் ஏதேனும் அடையாளம், அதன் முந்தைய ஜென்மத்தில் அது பெற்றதாக இருக்கும் என்பது ட்ரூஸ் இன மக்களின் நம்பிக்கை.

முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தான் முன்ஜென்மத்தில் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்றதும் சிறுவனுக்கு அனைத்தும் நினைவில் வந்து, முன்ஜென்மத்தில் தனது பெயர் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார்.

சிறுவன் கூறிய கிராமத்தினரும், சிறுவன் சொல்லும் பெயரில் இருந்தவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்கள். அப்போதுதான், அந்த சிறுவன், தன்னைக் கொன்றுவிட்டதாகவும், அவர்களை பெயர்களையும், யார் என்ற விவரத்தையும் கூறியுள்ளார்.

எனினும் தன்னை கொன்றதாக சிறுவன் , குற்றவாளிகள் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து உடனே சிறுவன் தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, அங்கு ஒரு எலும்புக்கூட இருந்ததும், அதன் மண்டைஓட்டில் கோடாரியால் வெட்டிய தடயம் இருந்ததும், அதே அடையாளம், சிறுவனின் நெற்றியில் இருந்ததையும் பார்த்து கிராம மக்கள் உறைந்து போனார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button