உலகம்

சிகிச்சைக்கு வந்த 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர் – பிரான்சில் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோயல் லிஸ்கோர்னெக்(வயது 74), கடந்த 2017-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் மீது ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக கடந்த 2005-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாக்டர் ஜோயல் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் டாக்டர் ஜோயலிடம் சிகிச்சைக்காக சென்றவர்கள் என்றும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சமயத்தில் மைனர்களாக இருந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், டாக்டர் ஜோயல் இதுவரை 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்த மருத்துவமனைகளில் இந்த பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளன.

குறிப்பாக நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது ஜோயல் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, தனது மகனின் தோழிகளையும் ஜோயல் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து ஜோயலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் அத்துமீறல் வழக்கு பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *