முச்சந்தி

அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்!

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button