முச்சந்தி
அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறுகிறதா?… ட்ரம்பின் வெளியுறவு கோட்பாட்டில் மாற்றம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

அமெரிக்காவை நேட்டோவிலிருந்து வெளியேற்ற முடியுமா ? அல்லது அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறுகின்றதா என்ற கேள்விகள் ஐரோப்பிய இராஜதந்திர வட்டரங்களில் எழுந்துள்ளன. அப்படி வெளியேற்றினாலோ அல்லது வெளியேறினாலோ என்ன நடக்கும் என்பதை அலசும் ஓர் ஆக்கமாகும்.
ஐரோப்பாவுடன் முரண்படும் டிரம்ப்:
ஐரோப்பிய நாடுகளுடன் முரண்படும் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவை நேட்டோவிலிருந்து விலக்கிக் கொண்டால், உலகளாவிய அதிகார சமநிலை ஒரே இரவில் மாறும் நிலை ஏற்படும். ஐரோப்பா இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பாரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும்.
அதன் விளைவாக உலகின் வலுவான பாதுகாப்பு அமைப்பான நேட்டோ சரிந்துவிடும் அல்லது ஒரு காகிதப் புலியாக மாறும் என்றும் நம்பலாம். அத்துடன் அமெரிக்க நிதி மற்றும் இராணுவ சக்தி இல்லாமல், நேட்டோ அமைப்பில் தங்களுக்குள் தலைமைக்காக போராடும் நிலை ஏற்படும்.அமெரிக்கா தற்போது நேட்டோவின் பாதுகாப்பு செலவினங்களில் எழுபது சதவீதத்தை செலுத்துகிறது. அது இல்லாமல், ஐரோப்பிய நாடுகள் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை வெகுவாக அதிகரிக்கவோ அல்லது இராணுவ வீழ்ச்சியை ஏற்கவோ கட்டாயப்படுத்தப்படும்.
மேலும் பல தசாப்தங்களாக அதன் சொந்த இராணுவப் படையை விரைவாக உருவாக்க முடியாவிட்டால், ரஷ்யா போன்ற பெரிய சக்திகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இருக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏதேனும் ஒரு ஐரோப்பிய நேட்டோ நாடு உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பினால், அவர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்காது.
நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்க ஆதரவு விலகினால், பிரான்ஸ் அல்லது ஜெர்மனி ரஷ்யாவுடன் நேரடியான வெளிப்படையான மோதலுக்கு ஆளாகுமா என்பதையும் இலகுவாக கணிக்க முடியாது.
அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறுமா ?
ரஷ்யாவை சுற்றியுள்ள பால்டிக் போன்ற சிறிய நேட்டோ நாடுகள் முற்றிலும் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கும். அமெரிக்க இராணுவ ஆதரவு இல்லாமல், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்களுக்கு எந்த பாதுகாப்பு உத்தரவாதமும் இருக்காது.
மாஸ்கோ தனது பிராந்திய செல்வாக்கை வலுப்படுத்துவதுடன், நேட்டோ சரிவை பச்சை விளக்காகக் காட்டி, ரஷ்யா ஒரு பெரிய மூலோபாய நன்மையைப் பெறும்.
முன்னைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் பால்டிக் போன்ற அமெரிக்க
பாதுகாப்பை நம்பியிருந்த நாடுகள் திடீரென்று பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் நிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படும்.
பாதுகாப்பை நம்பியிருந்த நாடுகள் திடீரென்று பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் நிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படும்.அண்மைக் காலமாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை உக்ரைனுக்கு – டிரம்ப் வலியுறுத்தி வருவது நேட்டோவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்துவதை காட்டுகிறது.
சுயாதீன பாதுகாப்புக் கொள்கை:
இதன் காரணமாக ஐரோப்பாவிற்கு அதன் சொந்த இராணுவப் படை தேவை என்று பிரான்ஸ் மக்ரோன், பிரித்தானிய ஸ்டெமர் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சுயாதீனமான பாதுகாப்புக் கொள்கைக்கு (Self Secure Policy) இன்னும் தயாராக இல்லை என்பது உண்மைதான்.
அதேவேளை நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்க ஆதரவு விலகினால், சில ஐரோப்பிய நாடுகள் சீனாவை நோக்கிச் செல்லலாம் அல்லது தங்கள் சொந்த பாதுகாப்பைப் பெற ரஷ்யாவுடன் புதிய இராஜதந்திர உத்திகளை புதுப்பிக்கவும் முயற்சிக்கலாம்.
புதிய கூட்டணிகளைத் தேடும் முயற்சிகள் தொடருமாயின் ஐரோப்பிய ஒன்றியம் பீதியடைவதுடன் பாரிய பின்னடைவை நோக்கி நகரும்.
இங்கிலாந்து பிரதமர் கெயார் ஸ்டார்மரின் உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுடன் பிணைக்கப்பட்ட நேட்டோவின் பாதுகாப்பு தொடர்பான கோட்பாடானது டிரம்பை அந்நியப்படுத்துவதால் பொருளாதார , சமூக அரசியல் ரீதியாகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் செயற்பாட்டு ரீதியான கோட்பாடானது அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ ஆதிக்கத்தின் முடிவு என்று கருதப்படவும் வாய்ப்புள்ளது என்று சில அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறினால், அது உலகின் போலீஸ்காரர் என்ற அதன் பங்கின் முடிவைக் குறிக்கும். அமெரிக்கா வெளிநாட்டுப் போர்களில் அல்ல, அதன் சொந்த எல்லைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார்.
ஆகையினால் அமெரிக்கா இல்லாத நேட்டோ நடைமுறையில் அர்த்தமற்றது. இதன் காரணமாக ரஷ்யா ஐரோப்பாவில் பெரும் செல்வாக்கைப் பெறும்.
அத்துடன் அமெரிக்க இராணுவ ஆதரவு இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடும். பிரித்தானிய அரசின் ஸ்டார்மர் போன்ற ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிற்கு எதிராக அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால், அமெரிக்கா அவர்களைப் பாதுகாப்பது முடிந்துவிட்டது என்ற ஒரு கருத்தை அவர்கள் உணரக்கூடும்.
உண்மையில் உலக மயமாக்கல்வாதிகள் நீண்ட காலமாக அமெரிக்க ஆதரவை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் நேட்டோவிலிருந்து விலகிச் சென்றால், விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும்.
நேட்டோவில் டிரம்ப் அனைத்து உரிமைகளையும் வைத்திருக்கிறார். ஸ்டார்மரும் ஐரோப்பிய ஒன்றியமும் அமைதியை விரும்புகிறதா – அல்லது தங்கள் சொந்த பாதுகாப்பை வைத்து போராட விரும்புகிறதா என்பதை எதிர்காலமே முடிவு செய்ய வேண்டும்.
புட்டின் – டிரம்ப் உறவு:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அளித்த பேட்டியில் புட்டின் விரும்பினால் உக்ரைன் முழுவதையும் வைத்திருக்க முடியும். விளாடிமிர் புட்டின் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். ஆனால் அவருக்கு அது தேவையில்லை, ஏனென்றால் அவர் விரும்பினால், அவர் உக்ரைன் முழுவதையும் வைத்திருக்க முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நான் புட்டினை சிறப்பானவர் என்று சித்தரிக்க முயற்சிக்கவில்லை. நான் உங்களுக்கு
உண்மையைச் சொல்கிறேன். இந்த மோதல் நடந்திருக்கக் கூடாது என்று
உண்மையைச் சொல்கிறேன். இந்த மோதல் நடந்திருக்கக் கூடாது என்றுடிரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால் ஜெலென்ஸ்கியிடம் ரஷ்யாவுடனான சமரசத்தை மீண்டும் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வித துருப்புச் சீட்டுகளும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் புட்டினுடனான தனது சமீபத்திய உரையாடலை மிகவும் நல்லது என்று கூறியதுடன், அதே நேரத்தில் கீவ் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்த ரஷ்யாவுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்காதது உட்பட, உக்ரைனில் உள்ள மோதலை சமாளிக்க ஐரோப்பா எதுவும் செய்யவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
![]()