முச்சந்தி

துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு.

இது தொடர்பில் கொழும்பு நீதிபதி வருகை தந்து விசாரணை முடியும் வரை குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப் படை வாகனம் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button