முச்சந்தி
விகாரைகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம்… நவீனன்

(போர் மௌனித்து பதினைந்து வருடங்கள் கடந்தும், இந்த நிலை இன்னும் தொடர்கிறது என்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழர்களது உணர்வுகளை மதிக்காத சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகள் இன்னும் தொடருமாக இருந்தால் தமிழர்களின் தாயக நிலம் விரைவில் முழுமையாக பறிபோகும் அபாயம் உள்ளது)
ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் பின்னர் இலங்கையில் இனங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளிற்கான மூல காரணம் மதமோ அன்றில் இனமோ அல்ல. ஆயினும் பெரும்பான்மை இன அடிப்படையிலான கட்சிகளின் அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவே தமிழர் மீதான இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் ஆகும்.
தமிழ் இனப்படுகொலை:
1948ஆம் ஆண்டு சிறிலங்காவின் விடுதலைக்குப் பிறகு, சிங்கள தேசியவாதக் கொள்கைகள் தமிழர்களை புறக்கணித்ததால், அதில் எதிர்ப்பு உருவாகி, இறுதியில் உள்நாட்டுப் போராக, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை வெடித்தது.இதனைவிட பொருளாதார போட்டி மற்றும் அரசியல் ரீதியான போராட்டங்கள் சிங்கள-தமிழ் மக்களின் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி மோதல்களைத் தூண்டின.
அதேவேளை தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்கள் உட்பட தமிழ் மக்களது பூர்வீக நிலங்களும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கோரமான போர் நடைபெற்று வந்தது. ஆனால் போர் மௌனித்து பதினைந்து வருடங்கள் கடந்தும், இந்த நிலை இன்னும் தொடர்கிறது என்பதை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழர்களது உணர்வுகளை மதிக்காத சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் தமிழர்களின் தாயக நிலம் விரைவில் பறிபோகும் அபாயம் உள்ளது.
கடந்தகால வரலாற்றில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை மட்டுமன்றி தமிழர்களின் நில அபகரிப்பையும் சிங்கள அரசு தொடர்ந்து செய்து வந்ததது.
குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய தலைநகரான திருகோணமலையில் ஸ்ரீ மலை நீலியம்மன்
கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் “பாசன பப்பாத ராஜமஹா விகாரை” என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்.
கோவிலை தீயிட்டு அழித்து விட்டு குறித்த கோவில் வளாகத்தில் “பாசன பப்பாத ராஜமஹா விகாரை” என்கிற பௌத்த ஆலயம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள்.அது மாத்திரமன்றி திருகோணமலை முகத்துவாராம் பிரதேசத்தில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவிலை அழித்து அந்த கோவில் சூழலில் “லங்கா பட்டுன சமுத்திரகிரி” என்கிற பெயரில் விகாரை ஒன்றை கட்டி இருக்கின்றார்கள்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்து வந்த விவசாயம் செய்த 41,000 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் கையகப்படுத்தி உள்ளது. சிறிலங்கா அரசின் துறைமுக அதிகார சபையும் காணிகளை கையகப்படுத்த முனைவதாகவும் குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனைப் போலவே வடக்கில் தமிழர்களின் தொன்மை மிக்க கோயில்கள் சூழ்ந்த காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலய சூழலில் “கெமுனு விகாரை” என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்.
மேலும் முல்ல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை உடைத்து வீசிவிட்டு அங்கு “குறுந்தூர் விகாரை” என்கின்ற பெயரில் விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள்.
இதனைப் போலவே முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி “குருகந்த புராண ராஜ மகா விகாரை” என்கின்ற பேரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்.சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்பு:
நில ஆக்கிரமிப்பை உறுதி செய்யும் வகையில் வவுனியா வெடுக்குநாறி மலை சிவன் ஆலய விக்கிரங்களை சேதப்படுத்தி அது “வட்டமான பர்வத விகாரை” என்கின்ற பௌத்த தொல்லியல் நிலம் என உரிமை கோருகின்றார்கள்.
வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை ஒன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றது.
1980 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து போரின் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.
அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பகுதியை இணைக்கும் மணலாறு பகுதியில் நீண்ட காலமாக நில உரிமையை தமிழர்கள் இழந்து வருகின்றனர். இதன் விளைவாக தென்னவன்மரபடி கந்தசாமி மலை முருகன் ஆலய பூசை வழிபாடுகளை தடை செய்து விட்டு அது “சங்கமலை விகாரை” க்குரிய நிலம் என உரிமை கோருகின்றார்கள்.
போர்க்காலத்தில் திருகோணமலை 64 ஆம் கட்டை ராஜவந்தான்மலை பிள்ளையார் ஆலயத்தை சிதைத்து விட்டு அங்கு “கொட்டியாராம ஸ்ரீ பத்ர தாது ராஜ மகா விகாரை” என்கின்ற பெயரில் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள்.
திருகோணமலை சூடைக்குடா மலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை அழித்து அங்கும் விகாரையொன்றை கட்டியிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் பாரம்பரிய முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பவற்றை அடித்து நொருக்கியிருக்கின்றார்கள்
நீண்ட காலமாக தமிழர் பாரம்பரியத்தை அழித்த சிங்கள அரசுகள், பல நூறு விகாரைகளை கட்டிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள், இது போதாதென்று தையிட்டியில் திஸ்ஸ விகாரையை உருவாக்கி கட்டி எழுப்பி விட்டனர்.
இந்த இடத்தில் விகாரை அடிக்கல் நாட்டப்பட்ட போது அதிகாரத்திலிருந்த ஆட்சியாளர்களின்
பங்காளியாக ஜேவிபி கட்சி இருந்ததை கூட பலரும் மறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்காளியாக ஜேவிபி கட்சி இருந்ததை கூட பலரும் மறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் சட்டவிரோதமாக சிங்கள ராணுவத்தினரால் தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தவிகாரையை நீக்க கோரி தாயகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக சிங்கள ராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்களிலும் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()