முச்சந்தி

உக்ரைனில் போரை  நிறுத்த முடிவு: டிரம்ப் – புட்டின் அதிரடியாக அறிவிப்பு!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(2022 பெப்ரவரியில் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கு முன்பு அன்றைய அமெரிக்க அதிபர் பைடனுடன் புட்டின் பலமுறை பேசினார். ஆயினும் பைடனின் அலட்சியப் போக்கும், ஆத்திரமூட்டும் பேச்சும் ரஷ்யாவை போருக்கு தள்ளியது.  ஆனால் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக பலமுறை உறுதியளித்துள்ளார்)

சர்வதேச அரசியலில் பல்த்த சர்ச்சைகளை கிளப்பியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இடையே தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.
போர் நிறுத்த முடிவு:
இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. நீண்ட நேரம் பேசினோம். பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் கிட்டத்தட்ட இரு மணி நேரம் நீடித்ததாகவும், இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புட்டினும் டிரம்பும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இருவரும் ரஷ்ய – உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பேசியது இதில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர், ஏஐ தொழில்நுட்பம், மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சனைகள் என்று பல விஷயங்கள் பற்றி இதில் பேசி உள்ளனர். இரண்டு தரப்பும் உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை தொடங்க இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தற்போது கூறப்படுகிறது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சாத்தியமான கைதிகள் பரிமாற்றம் குறித்து புட்டினும் டிரம்பும்
இரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புட்டின் டிரம்பை மாஸ்கோவிற்கு வருகை தர அழைத்தார். மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அதிகாரிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பை அமைக்கவும் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் திகதி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பைடன் அரசின் அலட்சியப் போக்கு:
உக்ரைன் மீதான போர் தொடங்க முன்னர், பிப்ரவரி 2022 ஆரம்பத்தில் பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதியுடன் புட்டின் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
2022 பெப்ரவரியில் போர் தொடங்க முன்னர் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவதற்கு முன்பு அன்றைய அமெரிக்க அதிபர் பைடனுடன் புட்டின் பலமுறை பேசினார்.
ஆயினும் பைடனின் அலட்சியப் போக்கும், ஆத்திரமூட்டும் பேச்சும் ரஷ்யாவை போருக்கு தள்ளியது.
ஆனால் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக டிரம்ப் பலமுறை உறுதியளித்துள்ளார்.
போருக்கு காரணம் என்ன?
அமெரிக்கா – ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான முரண்பாடுகள் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைனின் போராகும்.
உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக பல்வேறு முயற்சிகளை செய்தது.
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் – உக்ரைனும் தாயும் சேயுமாக ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது.
இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்து விட்டன.
இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் அழுத்தமாக அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் 2014 முதல் ஏற்பட்டுள்ளது.
சாத்தியமா போர் நிறுத்தம்?
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி உள்ளது.
நிதி தொடர்பாக வழங்கிய எல்லா உதவிகளையும் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முக்கியமாக நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள், நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை, ஆனால் போர்களை முழுமையாக நிறுத்தப்போகிறேன். அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம்.
இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம். அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம் என்றெல்லாம் டிரம்ப் கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசியுள்ளார்.
உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும். இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அமைதி நிலை தொடர வேண்டும். அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
உக்ரைன் நேட்டோவுடன் இணையாது.
அடுத்த 20 வருடங்களுக்கு உக்ரைன் நேட்டோவுடன் இணைய மாட்டார்கள். அதனால் இப்போது போர் செய்ய வேண்டாம். நேட்டோ படையில் உக்ரைன் 20 வருடங்களுக்கு இணையாத வகையில் நிறுத்தி வைக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் ஆலோசனை வழங்கினார்.
தற்போது அதிதீவிரமாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. நிதி தொடர்பாக வழங்கிய எல்லா உதவிகளையும் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button