முச்சந்தி

இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படலாம்

கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும், இதனை நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியே எதிர்க்கடசித் தலைவர் இதனை கூறினார்.

அதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டளர்கள் நாட்டைவிட்டு போகின்றனர். மின்சார தடை ஏற்படுகின்றது. மின்வெட்டுக்கு தீர்வு என்ன? இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

சூரியசக்தி மின் உற்பத்திக்கமைய கேள்வியிருக்காவிட்டால் அந்த தொழிற்பாடு ஞாயிற்றுக்கிழமை நடக்காவிட்டால் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. இதனால் இதற்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன? மின்வெட்டுக்கான காரணங்களையும் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் புதிதாக தொழிற்சாலைகளை உருவாக்கி கேள்விக்கும் பாவனைக்கும் ஏற்றவாறு ஏதேனும் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படாத வகையில் நீங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன? அவ்வாறு இன்றி குரங்காலும் மந்தியாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது பதில் இல்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் இங்குள்ளார். அவர் பதிலை வழங்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button