முச்சந்தி

பொலிஸாரின் தாக்குதலில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்; பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த மக்கள்

வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறி, பொலிஸ் நிலையத்தின் முன்பும் அதைச் சுற்றியும் கிட்டத்தட்ட 40 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஒரு குழந்தையின் தந்தையானஇ வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம். சமித டில்ஷான் என்ற 24 வயதுடையவர் ஆவார்.

போராட்டத்தையடுத்து வாதுவ பொலிஸாரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால் முற்றாக அடைக்கப்பட்டிருந்ததுடன்,கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் கொண்ட குழு பிரதான வீதியை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியது.

வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, வீடு திரும்பும் போது இரத்த வாந்தி எடுத்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், பொலிஸார் என்னை தடியடியால் கடுமையாக தாக்கியதாகவும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறியதாக அவருடைய மனைவி கூறினார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button