பலதும் பத்தும்

புட்டினை விமர்சித்த ரஷ்ய பாடகர் உயிரிழப்பு

உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விமர்சித்த ரஷ்ய பாடகர், தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த புதன்கிழமை (5), பொலிஸ் சோதனையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் இராணுவத்துக்கு நன்கொடை அளித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை “முட்டாள்” என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.

மேலும், உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, அவரது வீட்டில், பொலிஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button