அழிந்த காசா: டிரம்பின் கைப்பற்றும் திட்டம்!… இன்னோர் வடிவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசாவை கைப்பற்றி, சொர்க்க புரியாக மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள திட்டமானது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் இன்னொரு வடிவம் என்றே கருதலாம்)
45 கிலோ மீட்டர் நீளமும், ஆகக் கூடியளவான 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட, கடலோரப் பகுதியான காசாவை அமெரிக்கா எவ்வாறு, எந்த அதிகாரத்தின் கீழ் கைப்பற்றி ஆக்கிரமிக்க முடியும் என்ற கேள்விக்கு இதுவரை அமெரிக்க அதிபர் டிரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ நேரடியாக பதிலளிக்கவில்லை.
காசாவை கைப்பற்றி, சொர்க்க புரியாக மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள திட்டமானது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் இன்னொரு வடிவம் என்றே கருதலாம்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து அமெரிக்கா புதிய காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. போரின் கொடூர விளைவுகளை சந்தித்த பாலஸ்தீன மக்கள், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு எழ முடியாமல் தவித்து வருகின்றனர்.
சாம்பல் மேட்டிலிருந்து எழும் பீனிக்ஸ்:
ஆயினும் சாம்பல் மேட்டிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவைகள் போல, பாலஸ்தீன மக்கள் தங்கள் தாயகக் கோட்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகி நிற்பதில்லை. காலங்காலமாக எத்தனையோ இன்னல்களை சந்தித்து வந்த போதிலும், பாலஸ்தீன மக்கள் தங்களின் தாயக உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை.
தற்போது காசாவை சொர்க்க புரியாக மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள திட்டமானது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் இன்னொரு வடிவம் என்றே கருதலாம்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏன் அமெரிக்க ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன மக்கள் காசாவுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பாலஸ்தீனர்களுக்கு காசா மிகவும் துரதிர்ஷ்டவசமான இடம் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நரகத்தில் வாழ்வதைப் போல வாழ்கிறார்கள்.
காசா, மக்கள் வாழ்வதற்கான இடமல்ல என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். காசா பகுதியை
அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.
காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம். அப்பகுதி மக்களுக்கு வரம்பற்ற வேலைகள் மற்றும் வீட்டுவசதிகளை வழங்கும் ஒரு பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா உருவாக்கும்.
இது முழு மத்திய கிழக்குக்கும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். மத்திய கிழக்கின் அந்தப் பகுதிக்கு பெரும் ஸ்திரத்தன்மையை இது கொண்டு வரும். அங்கு யார் வசிப்பார்கள் என்று பலரும் கேட்கிறீர்கள். அது உலக மக்களின் வீடாக மாறக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. நிவாரண பணி நிறுத்தம் :
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் நிறுத்தம் நீடித்த அமைதியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த போர் நிறுத்தம், ரத்தக்களரி மற்றும் கொலைகளை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும்.
மத்திய கிழக்கில் நட்பு நாடுகளுடனான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பிராந்தியம் முழுவதும் அமெரிக்க வலிமையை மீண்டும் கட்டியெழுப்பவும் எனது நிர்வாகம் விரைவாக செயல்பட்டு வருகிறது.
யூத எதிர்ப்பைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் UNHRC மற்றும் UNRWA ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.
அத்துடன் ஹமாஸுக்கு பணத்தை வழங்கியதும் மனிதகுலத்துக்கு மிகவும் விசுவாசமற்றதுமான ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஈரானுக்கு எச்சரிக்கை:
ஈரானிய ஆட்சி மீது அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற எங்கள் கொள்கையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். ஈரானுக்கு எதிராக, மீண்டும் ஒருமுறை மிகவும் ஆக்ரோஷமான சாத்தியமான தடைகளை அமல்படுத்துவோம்.
ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம். மேலும், பிராந்தியத்திலும் உலகிலும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் ஈரானின் ஆட்சித் திறனைக் குறைப்போம் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அடாவடித்தனம் :
ஆனால் அமெரிக்கா அதன் இராணுவ மற்றும் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி
பாலஸ்தீன தாயகத்தை அச்சுறுத்துவது நிச்சயமாக அரபுலகில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் வர்த்தக வரிகள், பொருளாதர தடைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை கிழித்தெறியும் அச்சுறுத்தல்களால் மற்ற நாடுகளை கொடுமைப்படுத்துவது டிரம்ப் அரசின் தவறான அணுகுமுறை என்றே தோன்றுகிறது.
கனடா, மெக்சிக்கோ மேலான பொருளாதார வரி விதிப்பும், கிரின்லாந்து, பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை மேற்குலகம் முன்வைத்துள்ளது.
தற்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து அமெரிக்கா புதிய காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. போரின் கொடூர விளைவுகளை சந்தித்த பாலஸ்தீன மக்கள், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு எழ முடியாமல் தவித்து வருகையில், காசாவை சொர்க்க புரியாக மாற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள திட்டமானது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கொள்கையின் இன்னொரு வடிவம் என்றே கருதலாம்.
![]()