முச்சந்தி
சிறிலங்காவில் பயங்கரவாத தடை சட்டம்: ஒற்றை இராச்சிய எதேச்சாதிகாரமா ?… நவீனன்

(நிலமில்லாதோர்க்கு மொழி ஒருமைப்பாடே தேசியத் தன்மையாகிறது. அவ்வகையில் ஈழத் தமிழர்களின் தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட நீண்டகாலமாக போராடி வருகின்றனர்)
சிறிலங்காவில் 1978 அரசியலமைப்பும் அதன் செயற்பாடும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரச முறைமையின் அதிகார மையம் நிறைவேற்று ஜனாதிபதி என்று அழைக்கப்படும் பதவியை வகிக்கும் ஒரு தனி நபர் என்பதை நிரூபித்திருப்பதன் மூலம் இந்த நிலைமை நாட்டை மேலும் மோசமாக்கி உள்ளது.
தற்போது நாட்டில் இருப்பது ஜனாதிபதி எதேச்சாதிகாரமென என அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொது மக்களின் பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் என்ற நீதித்துறையின் வழமையான செயற் பாடுகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின்மூலம் எடுத்துக் கொள்வதன் ஊடாக ஏற்கனவே அதிகளவு அதிகாரங்களை கொண்டிருக்கும் நிறைவேற்றதிகாரப் பதவியை பயங்கரவாத தடைச்சட்டம் மேலும் மேம்படுத்துகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறிலங்காவில் பிரச்சனை மேலும் பாரதூரமானதாகிறது. இதனை கையாள்வது என்பது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சட்டத்தின் கருவியால் ஏற்படும் பயங்கரமான சூழ்நிலையாகும். இது பல்வேறு வகையான அச்சுறுத்தல்களின் மூலம் நாட்டை ஆள்வதற்கான முயற்சியாகும். இதில் கைது, தடுப்புக்காவல் மற்றும் கைதிகளின் அடிப்படை உரிமைகளை திரும்பப் பெறுதல் ஆகிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வது மிக முக்கியமான வகிபாகத்தை கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
இரு வருடங்களுக்கு முன்பாக மார்ச் 2023 இல் இலங்கை அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு ஒன்றை வர்த்தமானியில் வெளியிட்டது.
கொவிட்-19 தொற்று நோய் மற்றும் 2022 பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்த்திருத்துமாறு சர்வதேச செயற்பாட்டாளர்களிடம் இருந்து இலங்கை மேலதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் பயங்கவாதத்தை முறியடித்தல் என்ற பெயரில் இலங்கையின் அதிகார தரப்புகள் வழமையாக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை இலகுபடுத்தும் கொடுமையான சட்டமொன்றாக பயங்கரவாத தடைச் சட்டம் அமைந்துள்ளது.
பொதுவாக நோக்கும் வேளை, புதிய சட்டமூலம் 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரச்சினைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு மிகவும் ஒத்ததாகவே இந்த வரைபும் காணப்படுவதுடன் அதில் காணப்படும் பல பிரச்சினைகள் இதிலும் காணப்படுகின்றன.

சட்டத்தின் தக்கவாறான நடைமுறை தொடர்பில் சில வழிமுறை முன்னேற்றங்கள் காணப்படுகின்ற போதும், இவை சட்டமூலத்தின் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகளை கருத்திற் கொள்ளும் வேளை அம்மேம்பாடுகள் மிகவும் சிறியனவாகவே அமைந்துள்ளன.
இந்தப் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற வழிவகுப்பனவாகவே உள்ளன. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தின் வரைபு பொது மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் அதிக ஆலோசனைகள் எவையும் பெறப்படாமல் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது.
உண்மையில் இந்த சட்டமூலத்தைச் சூழ உரையாடல்கள் காணப்படாத நிலை அரசாங்கம் தனது பயங்கரவாத முறியடிப்பு சட்டத்தை சீர்த்திருத்துவதில் தீவிர அக்கறை கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்திருக்கவில்லை.
சர்வதேச சட்டங்களின் கீழ் மனித உரிமைகள், குடியியல் சுதந்திரங்கள், அத்துடன் மிகவும் குறிப்பிட்ட வகையில் ஒன்று சேர – ஒருங்கிணைய மற்றும் வெளிப்படுத்துவதற்குள்ள சுதந்திரங்களைப் பாதுகாக்க இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு இணங்கியொழுக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முழுமையாக தவறியுள்ளது.
தமிழர் உரிமைகள் மீறல்:
கடந்த எழுபது ஆண்டுகளில், பல முறை ரத்து செய்யப்பட்டு, தமிழர்களின் உரிமைகளை ஒழிக்க ஏராளமான திருத்தங்கள் சிறிலங்காவால் செய்யப்பட்டுள்ளன. தமிழர் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதில் இலங்கை அரசுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால், நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை.ஆளும் சக்திகளின் கடந்த கால வரலாறு தமிழர் உரிமைகளை எப்போதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியே உள்ளன.
நிலமில்லாதோர்க்கு மொழி ஒருமைப்பாடே தேசியத் தன்மையாகிறது. அவ்வகையில் ஈழத் தமிழர்களின் தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
பூர்வீகமாக தாயக மண்ணைப் பாதுகாக்கவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஈழப் போராட்டத்தில் முதன்மையான விடயங்களாக விளங்கின. ஆயினும் இந்தியா போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து ஒத்துழையாமல் இருந்ததால், தமிழர்களின் அபிலாஷைகள் சிறிதும் எட்டப்படவில்லை.
ஈழத் தமிழர் உரிமைகளை பாதுகாத்திட தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காவிடினும், முழு தோல்வியென கருதிவிட முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை சர்வதேச அரங்கில் இந்திய அரசும் குறைத்து மதிப்பிடுவதால் தமிழர்களின் இறையாண்மை என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
2009 இறுதிப்போரின் போது இலங்கை அரசுடன் இணைந்து பல அயல் நாடுகள் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் முடிந்து பதினைந்து ஆண்டுகள் கழித்தும் இலங்கையின் அரசால் உறுதியான தீர்வு எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. ஏனென்றால், இலங்கை தனது அரசியலமைப்பை ஒற்றை இராச்சிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
இன அடையாளங்களுடன் வாழும் இனமாக மட்டுமல்லாமல் உலகத்தோடு ஒன்றிணைந்து வாழக் கூடியதாகவும் தமிழ் மக்கள் இருக்க வேண்டும். இல்லாது போனால் தமிழ் மக்கள் வாழும் தேசம் வரலாற்று வளர்ச்சியில் பின்தங்கிவிடும் அல்லது அழிந்து போகும் என்பதை உணர வேண்டும்.
போர்ககால புரட்சியின் போது வீசப்படும் சர்வதேச அழுத்தங்கள், ஆங்காங்கே தமிழர் சமூகம் மீது விழும்போது எமக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.
ஆனாலும், போரிடும் காலத்தில் ஏதோ ஓர் வகையில் போராடியே தீரவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனம் முன்நோக்கி செல்லாமல் ஓரிடத்தில் தேங்கிவிடும்.
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம்
இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு
மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.
மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும்.இலங்கை அரசப் பயங்கரவாதம் எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்துதல் , மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுதல், சட்டத்திற்கு புறம்பான சித்திரவதைகளுக்கு தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் புரிந்து மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை மீறுதல், தமது நாட்டு பொதுமக்களை படுகொலை செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை இனவழிப்பு செய்தல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடர்ந்து வருவதால் இலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் ஆகும்.
இலங்கை அரசு முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் இலங்கை அரச பயங்கரவாதம் எனப்படுகிறது.இனப் படுகொலைகள், ஆட் கடத்தல், கட்டாய வெளியேற்றம், சித்ரவதை, நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுபானமை இன ஈழத்தமிழர்கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
![]()