முச்சந்தி

மெல்பேர்ணில் தைப்பொங்கல் விழா!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய ‘தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா’ நிகழ்வு கடந்த சனிக்கிழமை 18/1/25 அன்று , மெல்பேர்ண் Caulfield Racecourseஇல் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொங்கல் நிகழ்வானது,  உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்கள் தமிழ் மொழியால், தமிழ் இன உணர்வால், தமிழ்ப் பண்பாட்டால் தன்னார்வமாக ஒன்றுகூடும் நிகழ்வாக மிகச்சிறப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
இத்திருநாளில் விக்ரோரியா தமிழ் கலாச்சார கழகம் வருடா வருடம் VCE பரிட்சையில் தமிழ் பாடம் எடுத்து அதி கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழை பாடமாக எடுத்த மாணவர்களை கெளரவம் செய்யும் நிகழ்வும் தமிழ் சங்கங்கள் இணைந்து நடத்தும் தமிழர் திருநாள் நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்ண் பொங்கல் நிகழ்வில் சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்வு தமிழ்க் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
அத்துடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான, தடை ஓட்டம், உரி அடித்தல் (முட்டி உடைத்தல்), சாக்கு ஓட்டம், தேசிக்காய் ஓட்டம் , கிளித்தட்டு, கயிறு இழுத்தல், கபடி போன்றவை, சிறிய அளவிலான மத்தாப்புக் காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந் நிகழ்வில் இளையோர்கள் மற்றும் பெரியவர்கள் பங்குகொண்ட பொங்கல் நடனங்கள் உட்பட விசேட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button