முச்சந்தி

ஊடகவியலாளர்களின் தீப்பந்த போராட்டம்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களினால் தீப்பந்தங்களை ஏந்தியவாறு தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றினை குறிக்கும் வகையில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் வகையில் மட்டு. ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்இணைந்து ஏற்பாடுசெய்துள்ள தீப்பந்த போராட்டம் நேற்று மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகில் நடைபெற்றுள்ளது.

மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு குரல்கொடுத்தனர்.

இதன்போது இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும், ஊடக சுந்திரத்தினை உறுதிப்படுத்து, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறு, ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்காதே போன்ற கோசங்களை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button