பயங்கரவாதத் தடைச் சட்டம்; வெகுவிரைவில் நீக்கப்படும் 

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும்.இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்று சட்ட உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதுஎன அரசு பாராளுமன்றத்தில் அறிவித்தது.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரே இந்த அறிவிப்பை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியாது. பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு எழுந்து பதிலளித்த போதே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் உறுதிப்படுத்துவோம். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றார்.

இதனையடுத்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பேசப்படுகிறது. ஏனைய கட்சிகளை காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாங்கள் தான் பாரதூரமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே இதன் பாரதூரம் எமக்கு நன்கு தெரியும்.பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். . இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இச்சட்டத்தை நீக்குவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button