முச்சந்தி

வடக்கு மீனவர் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்தியா அர்ப் பணிப்புடன் செயற்படுகின்றது

வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்தியா அர்ப் பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்தார்.

பருத்தித்துறை வடக்கு கடல் தொழில் சமாசத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 40 மீனவர்களிற்கான வலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்திய பெருங்கடலால் இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் கலாசாரம் வேரூன்றி உள்ளதை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியா இலங்கைக்கு எப்போதும் நட்புறவிலே துணையாக நின்றது. அந்த வகையிலேதான் இன்றைய உதவி வழங்கலும் அமைந்துள்ளது. வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையிலே இந்திய உதவியில் குருநகரில் வலைதொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் வலைகள் அந்த தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.

பருத்தித்துறை துறைமுகம் சம்பந்தமான திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.நாங்கள் அப்போதைய அரசுடனும் இப்போதைய அரசுடனும் சேர்ந்து மீனவர் சமூகத்திற்கு உதவிகளை செய்து வருகின்றோம்.கடல் ரீதியான பாலங்கள் இருக்கின்றன அது தொடர்பான திட்டங்களையும் எதிர்பார்க்கலாம் என்பதுடன் இந்திய இலங்கை உறவை பலப்படுத்துவோம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடற் தொழிலாளர்கள் என்ன தேவை உள்ளதோ அதை தெரிவித்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button