கிரீன்லாந்து – பனாமா கால்வாய் மீளப்பெறும் ட்ரம்ப்?… அமெரிக்க 51வது மாநிலமாக கனடா… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கையகப்படுத்தும் நோக்கங்களை அறிவித்துள்ளமைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன)
கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதவை என்றும், அத்தீவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை பனாமா கால்வாய் – கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் இதுவரை நிராகரிக்க மறுத்துவிட்டார். அத்துடன் மெக்ஸிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிட முயற்சிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இராணுவ பலப் பிரயோகம்:
பனாமா கால்வாய்- கிரீன்லாந்தி, இரண்டின் மீதும் அமெரிக்க கட்டுப்பாட்டை பெறுவது வெறுமனே அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்ற டிரம்பின் கருத்துக்கள், பிராந்திய விரிவாக்கம் குறித்து சுயநிர்ணயத்திற்கு முன்னுரிமை அளித்த பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை நிராகரிப்பதைக் குறிக்கிறது.
உலகின் மிகப்பெரிய தீவை அமெரிக்க ஏற்றுக் கொள்ள, டிரம்ப் பல ஆண்டுகளாக தீவை வாங்கவும் முயற்சித்துள்ளார். ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குறுகிய பாதை ஆர்டிக் தீவு வழியாகச் செல்வதால், கிரீன்லாந்து அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் பாலஸ்டிக் ஏவுகணை முன்னெச்சரிக்கை அமைப்புக்கும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமெரிக்கர்களுக்கு கிரீன்லாந்து தேவை. கிரீன்லாந்து கனிம, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்வத்தையும் கொண்டுள்ளது. ஆனால் வளர்ச்சி மெதுவாகவே உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கிரீன்லாந்தை வாங்க முடியுமா?
கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதியாகும். இது 1953 இல் நோர்டிக் இராச்சியத்தின் முறையான பிரதேசமாக மாறியதுடன், டேனிஷ் அரசியலமைப்பிற்கும் உட்பட்டது. அதாவது அதன் சட்டப்பூர்வ நிலையில் எந்த மாற்றத்திற்கும் அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும்.
ஆர்க்டிக் தேசத்தை வாங்க முடியும் என்ற யோசனைக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு இருக்க மாட்டோம் என்று கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் கூறினார்.
தங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வது கிரின்லாந்து மக்களின் விருப்பம் என்று கூறினார்.
டேனிஷ் மற்றும் அமெரிக்கர்கள் உட்பட மற்றவர்கள் தங்கள் கருத்துக்களுக்கு உரிமையுடையவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகால அமெரிக்க நட்பு நாடாகவும், நேட்டோவின் உறுப்பினராகவும் உள்ள டென்மார்க்கிலிருந்து சுதந்திரத்தை அறிவிக்கும் உரிமை இந்த தீவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில், இந்த தீவுக்கு பரந்த சுயாட்சியும் வழங்கப்பட்டது.
கிரீன்லாந்து சுதந்திரம் அடையுமா ?
கிரீன்லாந்து சுதந்திரம் அடைந்தால், அது அமெரிக்காவுடன் இணைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. டென்மார்க் நாடாளுமன்றத்தின் கிரீன்லாந்து உறுப்பினரான ஆஜா கெம்னிட்ஸ், அமெரிக்கா கையகப்படுத்தும் யோசனையை உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்.
டென்மார்க் நாட்டை உள்ளடக்கி தனது பேரரசை திட்டத்தை விரிவுபடுத்தும் டிரம்பின் கனவுகளில் டென்மார்க் நாடு பகடைக்காயாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் உரிமைகோரலின் நியாயத்தன்மை குறித்து டிரம்ப் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
டென்மார்க்கிற்கு ஏதேனும் சட்டப்பூர்வ உரிமை இருக்கிறதா என்று கூட மக்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் அதை விட்டுவிட வேண்டும், ஏனென்றால் அது அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு தேவை என்றும் தெரிவித்தார்.
டென்மார்க் தொலைக்காட்சி TV2க்கு அளித்த பேட்டியில் டிரம்பின் கருத்துக்களைக் குறிப்பிட்டு, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், அமெரிக்கா டென்மார்க்கின் மிக முக்கியமான மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்று கூறினார்.
ஆனால் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெற வாஷிங்டன் இராணுவ அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்தும் என்று தான் நம்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டுவதற்கு வரவேற்பதாக திருமதி ஃபிரடெரிக்சன் கூறினார். ஆனால் அது கிரீன்லாந்து மக்களை மதிக்கும் வகையில் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் டென்மார்க்கும் அமெரிக்காவும் நேட்டோவில் இன்னும் ஒத்துழைத்து செயல்ப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பனாமா கால்வாய் யாருக்கு சொந்தம்?
பனாமா கால்வாயானது அட்லாண்டிக் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் ஒரு முக்கிய நீர்வழிப் பாதையாகும். இந்த பனாமா கால்வாயை மீண்டும் கைப்பற்ற டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.
மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பனாமா நீர்வழியைப்
பயன்படுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டி, பனாமா கால்வாயின் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவது பற்றி அறிவித்துள்ளார்.
சட்டப்படி பனாமா கால்வாய் ஆணையத்தின் மூலம் 25 ஆண்டுகளாக பனாமா அரசாங்கம் கால்வாயை சொந்தமாக வைத்து இயக்கி வருகிறது. அமெரிக்கா 1979 ஆம் ஆண்டு பனாமா கால்வாயை அந்நாட்டிற்கு திருப்பி அளித்தது.
மேலும் 1999 ஆம் ஆண்டு மூலோபாய நீர்வழியைக் கட்டுப்படுத்துவதில் அதன் கூட்டாண்மையை முடிவுக்கும் கொண்டு வந்தது.
ட்ரம்பின் தற்போதைய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பனாமா அதன் கடல்சார் கால்வாயின் இறையாண்மை பேரம் பேச முடியாதது என்று கூறியுள்ளது.
இந்த கால்வாயின் இறையாண்மை பேரம் பேசக்கூடியது அல்ல, மேலும் அது பனாமா போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்று வெளியுறவு அமைச்சர் ஜேவியர் மார்டினெஸ்-அச்சா கூறியுள்ளார். இவ்வாறே ஜனாதிபதி ஜோஸ் ரால் முலினோ தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தி உள்ளார்.
கனடா அமெரிக்காவுடன் இணையுமா?
கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதைச் செய்ய “பொருளாதார பலத்தையே” நம்பியிருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பொருளாதார பொற்காலத்துக்கு உறுதியளித்த டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிட முயற்சிப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கிழக்கு – மேற்கு கடற்கரைகளில் உள்ள கடல் பகுதிகள், கிழக்கு மெக்சிகோ வளைகுடா மற்றும் அலாஸ்காவின் வடக்கு பெரிங் கடலின் சில பகுதிகளை எதிர்கால எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குத்தகையிலிருந்து பாதுகாக்க பைடன் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
ஆனால், டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்கும் முதல் நாளிலேயே அதை மீண்டும் வழங்கப் போவதாகக் கூறியுள்ளது. மேலும் தேவைப்பட்டால் நீதிமன்றங்களுக்கு இவ்வழக்கை எடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.
![]()