அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில் கூட இல்லை! 

அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி செயலாளரினால் 2025 ஜனவரி முதலாம் திகதி சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், வெளிநாட்டு தூதுவர்களோ, வெளிநாட்டுகளில் இருந்து விசேட அதிகாரிகள் வரும்போது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் அங்குவந்து அதனை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

அதேபோன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவோ அல்லது ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடவோ எந்த ஒரு அமைச்சருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை.

அதேபோன்று வெளிநாட்டு தூதுவர்கள் அல்லது வெளிநாட்டு அதிகாரிகளால் விடுக்கப்படும் இரா போசன நிகழ்வு மற்றும் விழாக்களுக்கான அழைப்புகளை அமைச்சர்கள் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் அமைச்சர்களை சந்திப்பதாக இருந்தால், அதற்கு வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிருபத்தை பார்க்கும்போது சிரிப்பு வருகிறது, அதேநேரம் கவலையாகவும் இருக்கிறது.

ஏனெனில் இவ்வாறான கட்டுப்பாடுகள் வட கொரியாவில்கூட இல்லை என தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *