புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலம் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் அது இந்த மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம். அதன்பின்னர் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

இதன்படி மார்ச் மாத இறுதியில் தேர்தல் தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்க முடியும். இதனால் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அதனை நடத்த முடியுமாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *